காதல் திருமணங்கள் இன்று பரவலாக நடந்தேறிக் கொண்டு இருக்கின்றன என்பது நல்ல விஷயம் தான். இருந்தாலும், இன்றும் இந்தியாவில் பெற்றோர்கள் முடிவு செய்யும் திருமணங்கள் தான் அதிகம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்றே நினைக்கின்றேன். இன்று தகுந்த மணமகன் அல்லது மணமகளை  திருமண வெப்சைட்டுகள்  மூலம் தேடித் பிடிக்கிறார்கள். இன்று திருமணத்தை முடிவு செய்யும் சில முக்கியமான  விஷயங்கள் எவை என்று பார்ப்போம்.  ஆண்கள் எந்த விஷயங்களை வைத்து திருமணத்தை முடிவு செய்கிறார்கள்? பெண்கள் எந்தெந்த விஷயங்களை வைத்து திருமணத்தை முடிவு செய்கிறார்கள்? மேலே படியுங்கள்........



ஆண்கள் பெரும்பாலும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு கருத்து நிலவுவது உண்மை தான். அதிலும் குறிப்பாக வெள்ளை கலருக்கு ஆண்கள் சற்று அதிகம் மதிப்புக் கொடுப்பதாகவே தெரிகிறது. சில ஆண்கள் வரதட்சணை அதிகம் கொடுக்கும் இடத்தை தேர்வு செய்கின்றனர். சிலர் நல்ல வேலையில் இருக்கும் பெண்ணையே திருமணம் செய்ய விரும்புகின்றனர். எல்லோரும் நல்ல குணமுள்ள பெண்ணையே விரும்புகின்றனர்.

பெண்களும் ஓரளவுக்குத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. பொதுவாக அவர்கள் நன்றாக சம்பாதிக்கும் மாப்பிள்ளையையே தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள். ஒரு சில பெண்கள் நல்ல ஒழுக்கம் உள்ள ஆணையே விரும்புகின்றனர். ஒரு சில பெண்ணைப் பெற்றவர்கள் சொந்த வீடு இருக்கும் மாப்பிள்ளைக்கே மணம் முடித்துக் கொடுக்க சம்மதிக்கின்றனர்.  இன்னும் சிலரோ மாமியார், நாத்தனார் இல்லாத இடமாக பார்க்கின்றனர் என்பது தான் கொடுமை.

யாருமே நல்ல மனித நேயம் உள்ள நபரை தேர்ந்தெடுக்க விரும்புவதில்லை என்பது தான் நிஜம். அத்தகைய மனிதரை எல்லோரும் பிழைக்கத் தெரியாத மனிதன் என்று சொல்லி நிராகரித்து விடுகிறார்கள் என்பது தான் கொடுமையான உண்மை.

எது எப்படியோ இருவரும் ஒற்றுமையாய் கடைசி வரை வாழ்ந்தால் அதுவே போதும் என்று நினைக்கின்றேன்.

ஆக, இன்று திருமணத்தை முடிவு செய்யும் மிக முக்கிய விஷயங்களாக இருப்பவை தோற்றம், படிப்பு, வேலை, சொந்த வீடு, சிறிய குடும்பம், ஜாதக பொருத்தம்  போன்றவை தான்.

நீங்கள் உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ வரன் தேடும் போது எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

வாழ்க வளமுடன்!


திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்குப் பொருத்தமானவர் தானா?

Post a Comment

 
Top