இன்றைய நவீ ன உலகத்தில் போட்டி என்பது கடுமையாகத் தான் இருக்கிறது.  சுய முன்னேற்ற குருக்கள் உங்களை போட்டி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று  சொல்லுவார்கள். ஒருத்தரை வென்ற பின்  அடுத்து இன்னொருவர், அதற்கு பின் வேறொருவர் என்று நம் போட்டி தொடர்ந்து கொண்டே இருக்க  வேண்டும் என்பார்கள். அப்படி நாம், நம் திறமைகளையும், செயல் திறனையும் மற்றொருவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது சரியா? போட்டி போடுவது நல்லதா? அப்படி போட்டி போடுவதாக  இருந்தால்  யாருடன் நாம் போட்டி போட வேண்டும்? மேலே படியுங்கள்....


உண்மையில் இன்றைய சுய முன்னேற்ற குருக்கள் சிபாரிசு செய்யும் நுட்பங்கள்  தவறானவை. அவர்கள் உங்களை, உங்கள் திறமைகளை, செயல் திறன்களை மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்க்க சொல்லுகிறார்கள். வாழ்க்கை முழுவதும் மற்றவருடன் போட்டிப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார்கள். ஒரு இலக்கு, அது முடிந்த பின் மமற்றொரு இலக்கு, என்று மற்றவருடன் போட்டிப் போட்டுக் கொண்டே இறுதி வரை வாழ வேண்டும் என்பார்கள். இது முற்றிலும் தவறான நுட்பம் ஆகும்.

நீங்கள் உங்களை மற்றவருடன் ஒப்பிடும் போது உங்களுள் பதட்டம் வந்து விடுகிறது. உங்கள் செயல் திறன் இதனால் பாதிக்கப் படும். கலங்கிய மனதுடன் நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் முழுத் திறனை வெளிப் படுத்தாது என்பதே உண்மை. மனம் அமைதியாய்  இருக்கும் போது தான் உங்களின் 100% செயல் திறன் வெளிப் படும். நீங்கள் உங்களுடனே போட்டி போட வேண்டும். போன வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக செயல் பட வேண்டும் என்று முயற்சி எடுங்கள். மேலும், மேலும் நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டே செல்ல வேண்டும்.

நீங்கள் உங்களை மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவருடன் போட்டி போடாதீர்கள். உங்களுடனே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ளுங்கள். உங்கள் திறமைகளை தொடந்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

இது தான் சரியான வழி ஆகும்.

வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top