இவ்வுலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் ஒரே குறிக்கோள் தான் உள்ளது. அது என்னவென்றால் இன்பமாய் இருப்பது ஆகும். எல்லா உயிர்களின் ஒவ்வொரு அசைவும் செயலும் சந்தோஷத்தை நாடி தான் இருக்கிறது என்பது நிஜம். மனிதர்கள் பலவிதம் அவர்கள் இன்பம் அனுபவிக்கும் விஷயங்களும் பலவிதம் என்றால் அது மிகையாகாது. ஒரு சிலர் மதுவில் சொர்க்கத்தைக் காண்கின்றனர். அல்லது காண்பதாக கற்பனை செய்கின்றனர். சிலர் புகைப் பிடிப்பதில் சந்தோஷத்தை அனுபவிக்கின்றனர். எத்தனையோ இன்பங்கள் இவ்வுலகில் இருந்தாலும் காதல் காமத்தில் கிடைக்கும் இன்பம் தான் தலையாய இன்பமாகக் கருதப் படுகிறது. ஆனால் தியான தவத்தில் கிடைப்பது பேரின்பம் என்கிறார்கள். காதல் இன்பமும் பேரின்பமும் நிச்சயம் தெரிந்துகொள்ளப் படவேண்டியவை தான். மேலே படியுங்கள்....


காதலில் அல்லது காமத்தில் கிடைக்கும் இன்பம் கண்டிப்பாக அபரிதமானது தான். அதுவும் உண்மையான காதல் வயப்பட்ட இருவர் சேரும்போது கிடைக்கும் பரவச இன்பம் அற்புதம் தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தவத்தில் கிடைக்கும் இன்பம் பேரின்பம் என்கிறார்கள். அதாவது காதலில் கிடைக்கும் பரவச இன்பத்தை விட  பல்லாயிரம் மடங்கு அதிக இன்பம் தவத்தில் கிடைப்பதாக உணர்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் அதை பேரின்பம் என்றார்கள். அந்த பேரின்பத்தை அனுபவித்தவர்கள் சிற்றின்பத்திற்கு ஆசைப் படமாட்டார்கள் என்பது உண்மை.

நாம் தினசரி தியானம் செய்யும் போது மனம் மிகவும் அமைதி அடைகிறது. சந்தோஷமான நிலை தான் அது என்பது நிஜம். ஆனால் பேரின்பம் பெற வேண்டுமென்றால் நாம் தினமும் பல மணி நேரம் தியானம் செய்தாக வேண்டும். இன்றைய சூழலில் அது நிறைய பேருக்கு சாத்தியம் அல்ல என்பது தான் உண்மை. இருந்தாலும் நம்மால் முடிந்த அளவு தியானம் செய்தால் அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். சந்தோசம் அபரிதமாகக் கிடைக்கும். 

இன்றைய சூழலில் நம்மால் பேரின்பத்தை அடைய முடியாது என்பது உண்மை தான். சிற்றின்பத்தையாவது நாம் சரியாக அனுபவிக்க வேண்டும். அதாவது நீங்கள் உண்மையாக காதலிக்கும் நபருடன் மட்டும் உறவு கொள்ளுங்கள். அது இரு உடல்கள் மற்றும் ஆன்மாக்களின் சங்கமமாக இருக்கும் என்பது நிஜம்.  மேலும் முடிந்தமட்டிலும் தியானம் செய்து பழகுங்கள். அது நமக்கு மன அமைதியையும் மன பலத்தையும் அளிக்கும்.

வாழ்க வளமுடன்!  

உங்கள் விதியின் 5 விதிகள் 

ஈ.எஸ் .பி, டெலிபதி சக்திகள் உண்மையா?

Post a Comment

 
Top