அழகாக இருக்க விரும்பாத பெண் யார் இந்த உலகில்? அழகான பெண்ணை இரசிக்காதவர் யார் இந்த உலகில்? அழகான பெண்ணை மற்ற பெண்களே இரசிப்பார்கள் என்கின்ற  போது ஆண்களின் இரசிப்பைப்  பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அழகான பெண்ணாக பிறப்பது அதிர்ஷ்டமா? அல்லது பெண்கள் அழகாய் இருப்பது ஆபத்தா? அழகான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் யாவை?  மேலே படியுங்கள்.....

ரஜினிகாந்துடன் ஐஸ்வர்யா ராய்:

ஒரு பெண் அழகாக இருக்கும் போது பல நன்மைகளும், சில தீமைகளும் ஏற்படுகின்றன என்றே நினைக்கின்றேன். அழகான பெண்ணுக்கு இந்த சமுதாயத்தில் ஒரு மதிப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக ஆண்கள் அழகான பெண்களுக்கு விரும்பி உதவி செய்ய முன் வருவர். இதனால் பெண்கள் பல காரியங்களை எளிதில் பண்ணி முடிக்க முடியும். வேலை வாய்ப்பும் அழகான பெண்களுக்கு அதிகம் என்றே சொல்ல வேண்டும். பொதுவாக சொல்ல வேண்டுமென்றால் அழகான பெண்களால் காரியங்களை எளிதில் முடிக்க முடியும்.

அஞ்சலீனா ஜூலி:

அழகான பெண்களுக்கு சில தீமைகளும் உண்டு என்பதை மறுக்க இயலாது. அழகான பெண்களுக்கு சில ஆபத்துகளும் உண்டு. ஆண்கள் அவர்களை வெறித்து பார்ப்பது அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும். சில காமாந்தகார ஆண்கள் இவர்களிடம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டு. இரண்டு ஆண்கள் இவர்களுக்காக சண்டை போடுவதும் நிகழும். அழகான பெண்களின் வாழ்க்கைத் துணைவர்கள் குறுகிய மனப்பான்மை உடையவர்களாக இருந்தால் அவர்கள் இல்வாழ்க்கை பாதிக்கப்படும் என்பது நிஜம்.

எந்த ஒரு நல்ல விஷயத்திலும் சில தீமைகளும் இருக்கும் என்பது உலக நியதி. அழகான பெண்கள் அதற்கு விதிவிலக்கல்ல.ஒரு பெண் அழகாக இருப்பதால் பல நன்மைகளும் சில தீமைகளும் ஏற்படும்.

அழகாய் இருப்பது ஒரு பெண்ணுக்கு சற்று ஆபத்து தான். ஆனால் அதனால் ஏற்படும் நன்மைகளை கணக்கிட்டுப் பார்க்கும் போது அழகாய் இருப்பது சாபம் அல்ல, வரம் தான் என்பது தெளிவாகிறது.

சில அழகியப் பெண்களின் பட்டியல் இதோ உங்களுக்காக:

ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதாசென், பிரியங்கா சோப்ரா, மாதுரி தீக்க்ஷித், கத்ரீனா கைப், தீபிகா படுகோன், கரீனா கபூர், கரிஷ்மா கபூர், பிபாஷா பாசு, அஞ்சலீனா ஜூலி, ஜுலியா ராபெர்ட்ஸ், ஸ்கார்லெட் ஜான்சன், ஜென்னிபர் லோபஸ், பிரியங்கா காந்தி, ஹேம மாலினி, ஜீனத்தாமன், வைஜயந்திமாலா, ரேகா.

வாழ்க அழகுப் பெண்கள்!

வாழ்க வளமுடன்!

உங்களை நீங்களே கொண்டாடிக் கொள்ளுங்கள்

நீங்கள் கடினமாக உழைக்கத்தான் வேண்டுமா?










Post a Comment

 
Top