வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் நினைத்த காரியத்தை முடிக்கும் வைராக்கியம் வேண்டும் என்பார்கள். வைராக்கியம் இல்லாதவர்கள்  பாதியிலேயே தங்கள் முயற்சியை கை விட்டு விடுவார்கள். மிகப் பெரிய சாதனையாளர்கள் எல்லோரும் விடா முயற்சி உடையவர்களே. நினைத்ததை நடத்தியே முடிப்பவரா நீங்கள்?


பாராக் ஓபாமா, நரேந்திர மோடி, சச்சின் டெண்டுல்கர், ரோஜர் பெடெரெர், மரியா ஷரபோவா, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், இளைய ராஜா, மாதுரி தீக்க்ஷித், பாலச்சந்தர் போன்றோர் எத்தனையொ இன்னல்களையும், தடைகளையும் தாண்டி, நினைத்ததை நடத்தி முடித்தவர்கள் தான்.

இலட்சியங்களும், வைராக்யமும் இல்லாத வாழ்க்கை உயிரில்லாத சவத்திற்கு சமமே. வாழ்க்கையில் முயற்சிகள் செய்து தோற்றுப் போகலாம். அது தப்பில்லை. ஆனால் இலட்சியங்களும், முயற்சிகளும் இல்லாமலே தோற்றுப் போவது என்பது விளையாடாமலே தோற்றுப் போவதற்கு ஒப்பாகும். எத்தனை முறை தோற்றாலும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி கிடைப்பது சர்வ நிச்சயம். ஒவ்வொரு தோல்வியையும் ஒரு வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால்  வானமே வசப்படும் என்பது நிஜம்.

நினைத்ததை எப்படிசாதிப்பது? 


முதலில் சாதிக்கக்கூடிய இலட்சியங்களை மேற்கொள்ள வேண்டும். பத்து ரூபாய் கையில் வைத்துக் கொண்டு பத்தே நாட்களில் பத்துக் கோடி சம்பாதிப்பேன் என்பது போன்ற சாதிக்க முடியாத இலட்சியங்களை மேற்கொள்ளுவதால் எந்த பயனும் இல்லை. ஆக, சாதிக்கக்கூடிய இலட்சியங்களை மேற்கொள்ள வேண்டும். பின் சாதிக்க வெண்டும் என்கின்ற வெறி தீயாய் பற்றி எரிய வெண்டும். நம் முழு கவனமும் இலட்சியத்திலேயே இருக்க வெண்டும். ஒவ்வொரு வினாடியும் அந்த இலட்சியத்துடனே வாழப் பழக வேண்டும். நினைத்ததை அடைய பல தியாகங்களை செய்ய விருப்பத்தோடும் தயாராகவும் இருக்க வேண்டும்.

இலட்சியங்களை அடைந்தால் என்னென்ன நற் பலன்கள் ஏற்படும் என்பதை
கற்பனை செய்துப் பார்க்க வேண்டும். நீங்கள் கோடீஸ்வரராக ஆக விரும்பினால், நீங்கள் பெரிய பங்களாவில் வாழ்வதைப் போல் கற்பனை செய்ய வெண்டும். படகு காரில் பவனி வருவது போல் நினைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ சாதனையாளர்களின் வெற்றிக் கதைகளை அடிக்கடி படிக்க வேண்டும்.

ஒருவன் பெரிய அளவில் சாதிக்க முடியாவிட்டால், தனது குடும்ப அளவிலாவது எதையாவது சாதித்தே தீர வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

வாழ்க  வளமுடன்!

உங்கள் விதிப் படி தான் எல்லாம் நடக்கிறதா?

நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?


Post a Comment

 
Top