மனிதன் சிந்திக்கத் தெரிந்த உயரினம். மனித மனம் அற்புத சக்திகள் வாய்ந்தது. உங்கள் எண்ணங்கள் வலிமை வாய்ந்தவை. நேர்மறை எண்ணங்கள் நல்ல விளைவுகளையும், எதிர்மறை எண்ணங்கள் தீய விளைவுகளையும் கொடுக்கின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் எப்பொழுதுமே நல்லதையே நினைக்கச் சொன்னார்கள்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிப் போய் விடுகிறீர்கள் என்பது நிஜம். நீங்கள் கோடீஸ்வரராக ஆக முழு மனதோடு நினைத்தால் ஒரு நாள் கோடீஸ்வரராக ஆகி விடுவீர்கள். நீங்கள் உங்களை நோயாளியாக கற்பனை செய்துக் கொண்டு வாழ ஆரம்பித்தால், ஒரு நாள் நோயாளியாகப் போவதும் உறுதி.
எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. உங்கள் எண்ணங்கள், உங்கள் சந்தோஷங்கள், துக்கங்கள் எல்லாமே பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் அடிக்கடி எண்ணும் எண்ணங்கள் உங்கள் ஆழ் மனதில் பதிந்து விடுகின்றன. நீங்கள் அடிக்கடி எண்ணும் எண்ணங்கள் நல்லவைகளாக, நேர்மறை எண்ணங்களாக இருந்தால் நல்ல விளைவுகளை பிரபஞ்சம் உங்களுக்குத் திருப்பி தரும். நீங்கள் அடிக்கடி எண்ணும் எண்ணங்கள் தீயவைகளாக, எதிர்மறை எண்ணங்களாக இருந்தால் கெட்ட விளைவுகளையே பிரபஞ்சம் உங்களுக்குத் திருப்பி தரும். இது தான் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி (Law of attraction) ஆகும்.
ஆதலால் தான் சிலர் பேசும் போது 'நல்லது, நல்லது' என்பார்கள். வீட்டில் பேசும் போது எதுவுமே இல்லை இல்லை என்று சொல்லக்கூடாது.அதற்குப் பதில் 'அது வாங்க வேண்டும், இது வாங்க வேண்டும்' என்று சொல்லலாம். 'என்னால் முடியாது, அது கஷ்டம், அவர் சரியில்லை, இவர் மோசம், எனக்கு எப்போதும் தோல்வி தான் ஏற்படும், எனக்கு எல்லாமே கெட்டவைகளாகத் தான் நடக்கும், வாழ்க்கையே வெறுக்கிறது, ஏதோ இருக்கேன், சாவதே மேல் , ' என்று சொல்லுவதை தவிர்க்க வேண்டும்.
எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை வார்த்தைகள் அபாயகரமானவை. நல்ல மந்திரங்கள், பக்திப் பாடல்கள் போன்றவற்றைக் கேளுங்கள். வீட்டில் அவற்றை ஒலிக்கச் செய்யங்கள். நல்ல விஷயங்களை எப்பொழுதும் உற்சாகத்துடன் பேசுங்கள்.
எதிர்மறை எண்ணங்கள் அதிகம் வந்தால் தியானம் முறைப்படி தினசரி செய்யுங்கள்.
ஆம். நீங்கள் நல்லதையே நினைத்தால் உங்களுக்கு நல்லவை தான் நடக்கும். அது சீசரின் மனைவி போல் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று உறுதியாக சொல்லுவேன்.
வாழ்க வளமுடன்!
உங்கள் வெற்றியை நிர்ணயிப்பது எது?
மரண பயம்

Post a Comment