நேரம் மிகவும் முக்கியமானது. அது பொன்னுக்கு சமமானது. நேரம் பணத்திற்கு சமமானது என்றும் சொல்லலாம். நேரத்தை வீணாக்கக்கூடாது என்று எல்லோரும் சொல்லுகிறார்களே, அது ஏன் தெரியுமா? மேலே படியுங்கள்.....


எல்லா உயிரினங்களிலும் மனித இனம் மிகவும் உயர்ந்தது எனலாம். மனிதனாய் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அத்தகைய மனித வாழ்க்கை மிகவும் குறுகியது என்பது  நிஜம். இன்று ஒரு இந்தியனின் சராசரி ஆயுள் சுமார் 65 வருடங்கள்.

ஒரு நாளைக்கு 24 மணி என்பது எல்லோரும் அறிந்ததே. அதில் சுமார் 7 மணி நேரம் நாம் தூங்கி விடுகிறோம். காலைக் கடன் முடித்தல், குளித்தல், டிரஸ் செய்துக் கொள்ளுதல், சாப்பிடுதல் போன்றவற்றிற்கு சுமார் 3 மணி நேரம் செலவழிந்து விடுகிறது. வேலைக்குச்  சென்று வரும்  பிரயாண நேரம் மற்றும் வேலை செய்யும் நேரம் என சுமார் 10 மணி நேரம் கழிந்து விடுகிறது. ஆக மீதி சுமார் 4 மணி நேரம் தான் நமக்கு செலவழிக்க இருக்கிறது.

இப்பொழுது அந்த 4 மணி நேரத்தை எவ்வளவு பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும் என்பது புரிகிறதல்லவா? பலர் அந்த பொக்கிஷமான 4 மணி நேரத்தை சிகரெட் பிடிப்பதிலும், மது அருந்துவதிலும், காம களியாட்டகளில் ஈடுபடுவதிலும் செலவழிக்கின்றனர் என்பது தான் பரிதாபம்.

இருக்கும் குறைந்தபட்ச நேரத்தை முடிந்த மட்டிலும் பயனுள்ளதாக செலவழிக்க வேண்டும். புதிய நல்ல  விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை  செய்யலாம்.

மனிதனாய் பிறந்ததின் காரணமே கடவுளை அறிவது தான். நம்முள் இருக்கும் இறைவனை அறியும் போது நம்மை நாமே அறிகிறோம். தன்னை அறியும் போது இந்த மனித பிறவியின் அர்த்தம் பூர்த்தியாகிறது என்பது நிஜம். தன்னை அறிவது எப்படி? முறையான தியானம் செய்தால் நாம் தன்னை அறியலாம். தன்னுள் இருக்கும் இறைவனை அறியலாம். அப்பொழுது இந்த பிரபஞ்சமே உங்கள் வசப்படும் என்றால் அது மிகையாகாது.

வாழ்க வளமுடன்!

ஒப்பிடுதல் முன்னேற்றத்திற்குத்  தேவையா?

மகிழ்ச்சியாய் வாழ்வது எப்படி?




Post a Comment

 
Top