சில  சமயங்களில் எல்லாமே நமக்கு எதிராக நடக்கலாம். நமது வேலை போய் விடலாம். அல்லது வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்படலாம். நமது குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். குழந்தைகள் நம் சொல் பேச்சு கேட்காமல் தவறான வழிகளில் நடக்கலாம். உங்களுக்கோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ உடல் நிலை சரி இல்லாமல் போகலாம். இந்த பிரச்சினைகள் எல்லாமே ஒருவருக்கு ஒரே சமயத்தில் வந்து அவரை நரக வேதைனையில் தள்ளலாம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால்,  எல்லாமே உங்களுக்கு எதிராக நடந்தால், நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றிக் காண்போம்.


1. துன்பங்கள் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி என்பதை உணர வேண்டும். இவ்வுலகில் துன்பங்களே இல்லாதவர் என்று ஒருவரும் இல்லை என்பதை அறிய வேண்டும்.

2. துன்பங்கள் நிரந்தரமானவை அல்ல என்ற தெளிவு பெற வேண்டும்.

3. இன்பங்களை  நாம் வரவேற்கிறோம். அது போல்  துன்பங்களையும் வர வேற்க வேண்டும். துன்பங்களில் இருந்து நாம் பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். பிரச்சினைகள் நம்மை பலப்படுத்துவதாக நினைக்க வேண்டும்.

4. அவரால் தான் அப்படி ஆயிற்று, இவரால் தான் இந்த பிரச்சினை எனக்கு என்று மற்றவர் மீது பழியைப் போட்டு புலம்பாமல் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை கண்டு பிடித்து அப்பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

5. எது நடக்குமோ அது நடந்தே தீரும் என்ற தெளிவு வேண்டும். விதி நம்மை அழைத்து செல்லும் பாதையில் தைரியமாக செல்ல வேண்டும். விதி நமக்குக் கொடுக்கும் கஷ்டங்களை அனுபவிக்கத் தயாராக இருக்க வேண்டும்.

6. கடுமையாக உழைக்க வேண்டும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாம் பிரச்சினைகளின் போது இரண்டு மடங்கு அதிகம் உழைக்க வேண்டும். நம் முயற்சிகளை எக்காரணம் கொண்டும் நிறுத்தி விடக் கூடாது. மனசை தளர விடக் கூடவே கூடாது.

7. நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கையுடன் இருங்கள்.உங்கள் கஷ்டங்கள் ஒரு நாள் நிச்சயம் தீரும். அது வரை நம்பிக்கையுடன் வாழ்வது மிகவும் அவசியம்.

8. நன்றாக யோசித்து சரியான முடிவுகளை எடுங்கள்.

9. கடவுளிடம் சரண் அடைத்து விடுங்கள். அவர் உங்கள் பிரச்சினைகளை பார்த்துக் கொள்வார் என்று உறுதியாக நம்புங்கள்.

10. நீங்கள் கஷ்டப் படும்போது உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள். உங்களுக்கு யாரும் உதவ முன் வர மாட்டார்கள். அது தான் உலகம். பணம் இருப்பவனுக்குத் தான் எல்லோரும் பண உதவி செய்வார்கள். இல்லாதவனுக்கு எந்த உதவியும் யாரும் செய்ய மாட்டார்கள். தனித்து நின்று போராடுங்கள். உங்களால் முடியும். உங்களின் முழுத் திறமையும் அப்போது வெளிப்படும் என்பது நிஜம்.

வாழ்க வளமுடன்!

உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 20 வழிகள் 

உங்கள் விதியின் 5 விதிகள் 


Post a Comment

 
Top