மகேந்திர சிங் டோனி இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் காப்டன்களில் ஒருவர் என்பதை யாரும் மறுக்க இயலாது. வித்தியாசமான முடிவுகளை அதிரடியாக மைதானத்தில் எடுத்த பெருமை அவருக்கு நிச்சயம் உண்டு. சில முடிவுகள் தோல்விகளையும் பல முடிவுகள் வெற்றிகளையும் தந்திருக்கிறது எனலாம். ஆஸ்திரேலியாவுடன் இந்தியா இப்பொழுது டெஸ்ட் போட்டிகள் விளையாடிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது போட்டி இன்று முடிந்த கையுடன் டோனி ஓய்வை அறிவித்திருக்கிறார். அது அவரின் இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஏன் டோனி திடீரென்று ஓய்வு பெற்றார்? மேலே படியுங்கள்.....
மகேந்திர சிங் டோனி இது வரை 90 டெஸ்ட் போட்டிகள் விளையாடியிருக்கிறார். அவர் குவித்துள்ள ரன்கள் 4876. இனி ஒரு நாள் போட்டிகளிலும் T20 போட்டிகளிலும் முழு கவனம் செலுத்தப் போவதாக டோனி அறிவித்திருக்கிறார்,
டோனி இன்னும் நல்ல பாட்டிங் திறனுடன் இருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன். அவரின் அணுகு முறையில் தான் சிறிது எதிர்மறையான போக்கு தெரிகிறது எனக்கு. மற்றபடி அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு ஆற்றிய சேவை மகத்தானது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்றே நினைக்கின்றேன்.
வாழ்க டோனியின் புகழ் !
அற்புதமான இந்திய சினிமா இசை
உங்கள் பணப் பிரச்சினைக்குத் தீர்வு

Post a Comment