பிறந்தவர் இறப்பது உலக இயல்பு தான். என்றாலும் சிலரது மறைவு நம்மை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது என்பது நிஜம். இயக்குனர் இமயம் மறைவு சினிமா உலகத்திற்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தமிழகத்திற்கே பேரிழப்பாகும். அன்னாரின் ஆன்மா அமைதி அடைய எல்லா வல்ல இறைவனைப்  பிரார்த்திப்போம்.



கே. பாலச்சந்தர் அரசாங்க உத்தியோகத்தை கலையின் மேல் உள்ள காதலால் உதறி தள்ளி விட்டு கலைத்துறையில் பிரவேசித்தார். அன்று முதல் கடைசி வரை தனக்கென்று ஒரு தனி பாணியைக் கொண்டு கலைத்துறையை ஒரு மன்னனைப் போல் கோலோச்சி வந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழ் சினிமா அவரால் ஒரு புது பரிமாணம் பெற்றது என்று உறுதியாக சொல்லலாம்.

அவர் திரையுலகத்திற்கு நூற்றுக்கணக்கான நடிகர்களை அறிமுகப்படுத்தினார். உலக நாயகன் கமல ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களே. எததனை வெற்றிப் படங்கள். எத்தனைப்  பேரை அவரது படங்கள் மகிழ்வித்திருக்கின்றன? எத்தனை பேர் அவரால் இயக்குனரானார்கள்? 

அவரைப் போல் வேறு ஒரு இயக்குனர் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பது மிகவும் அரிது என்றே நினைக்கின்றேன்.

வாழ்க கே. பி.  யின் புகழ்! 





                         ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் 

          அற்புதமான இந்திய திரை இசை 




Post a Comment

 
Top