பக்தி என்பது வயதான பின் தான் வருமோ என்று நினைக்கத்தோன்றுகிறது.. ஆலயங்களிலோ, ஆன்மிக சொற்பொழிவுகளிலோ வயதானவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது. விடுமுறை நாட்களில் சொந்தக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக தீர்த்த யாத்திரை செல்லலாம் என்றால் இளசுகள் ஒப்புக்கொள்ளமாட்டர்கள். 'இந்த பெரிசுகளுக்கு வேறு வேலை இல்லை, விடுமுறை நாட்களில் சுற்றுலாத்தலங்களுக்குத் தான் செல்ல வேண்டும்' என்று சொல்லுவர். பகவத் கீதை வகுப்புகளில் பெரும்பாலானோர் 50 ஐ தாண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.



பக்தியும், பகவத் கீதையும் வயதானவர்களுக்குத் தானா? ஏன் இளைஞர்கள் பக்தியிலும், பகவத் கீதையிலும் அக்கறை காட்டக்  கூடாதா? பொதுவாகவே இளைஞர்கள் அவைகளைத் தங்களுக்கு சம்பந்தமில்லா விஷயங்களாகவே பார்க்கிறார்கள். ஆனால் பக்தியினாலும், பகவத் கீதையினாலும் பல நன்மைகளை இளைஞர்கள் பெறலாம் என்பதே உண்மை. 

ஆன்மிகத்தில் ஈடுபடும்போது உள்ளம் தூய்மை அடைகிறது. அதனால் நல்ல எண்ணங்கள் உங்கள் மனதில் உருவாகும். நல்ல எண்ணங்கள், நல்ல 
பழக்கவழக்கங்களையும், நல்ல செயல்களையும் உருவாக்கும். அதனால்  நீங்கள் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற்று சந்தோஷமாக வாழ இயலும்.

பகவத் கீதை தான் உலகின் முதல் சுய முன்னேற்ற நூல் என்று சொல்லலாம். கீதையில் வாழ்க்கைக்குத்  தேவையான அத்தனை விஷயங்களும் குவிந்து கிடக்கின்றன. கீதையை நீங்கள் படித்து விட்டால் பின் வேறு எந்த சுய முன்னேற்ற நூலும் நீங்கள் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே நான் உறுதியாக நம்புகிறேன். வயதானவர்களும்  அதைப் படித்து  கீதையின் உபதேசங்களை கடைப்பிடித்து முன்னேற்றம் காணலாம் என்பது உண்மையே. ஆனால்  இளைஞர்களுக்குத் தான் உண்மையில் கீதை அதிக அளவில் பயன் தர முடியும்.

ஆன்மிகமும், யோகா, தியானம் மற்றும் பகவத் கீதையும் இளைஞர்களை நிச்சயம் மேம்படுத்தும். அவர்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாகவும், சந்தோஷமானதாகவும் எளிதில் மாற்றும்.

ஆகையால் இளைஞர்களே, பக்தியும், பகவத் கீதையும் முக்கியமாக உங்களுக்குத் தான் தேவை. 

வாழ்க வளமுடன்!

                              எதிர்பாராததை எதிர்பாருங்கள் 

                  எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

Post a Comment

 
Top