'அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்' என்கின்ற பழமொழி நம் எல்லோருக்கும் தெரியும். அது உண்மைதானா? மேலே படியுங்கள்.......

தாய்க்கு தன்  குழந்தையின் தேவைகள் நன்றாகத்  தெரியும். இருப்பினும் சில சமயங்களில் குழந்தை தன பசியை தாய்க்கு உணர்த்த அழுகிறது. தாய் உடனே குழந்தையை எடுத்து அணைத்து பால் கொடுக்கிறாள்.


இதே விஷயம் எல்லா இடங்களிலும் நடக்கத்தான் செய்கிறது. எதுவுமே கேட்டல் தான் கிடைக்கும். பலர் தங்களுக்கு சொந்தமானதைக் கேட்கவே  யோசிப்பார்கள். அவர்களால் பிறரிடம் உதவி எப்படி கேட்க முடியும்? அதனால் அவர்கள் வாழ்க்கையில் பல நல்ல சந்தர்ப்பங்களை இழக்கிறார்கள். பல வெற்றிகளை கோட்டை விடுகிறார்கள்.

இயேசு கிருஸ்துவே 'கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்' என்று கூறி இருக்கிறார்.கேட்பது என்பது ஒரு கலை. நீங்கள் கேட்டதை  ஒருவர் தட்டாமல் கொடுக்கும்படி கேட்பது என்பது ஒரு தனித் திறமை என்றே சொல்ல வேண்டும். ஒரு சிலர் தான் இந்த திறமையைப் பெற்றிருக்கின்றனர்.

நீங்கள் கேட்கும் போது தயக்கம் இல்லாமல் கேட்க வேண்டும். அதே சமயம் வற்புறுத்துவது போல் இருக்க கூடாது. நீங்கள் எத்தனை சோகமாக இருந்தாலும் சிரித்த முகத்துடன் கேளுங்கள். கேட்பதற்கு உங்களுக்கு தகுதி இருக்கிறது என்று உண்மையாக நம்புங்கள். கேட்டது கிடைக்க வில்லைஎன்றாலும் புன்சிரிப்பு மாறாமல் 'பரவாயில்லை' என்று சொல்லுங்கள். வருத்தப்படவோ மனம் தளரவோ வேண்டாம்.

இவ்வுலகில் அடுத்தவரின் உதவி இல்லாமல் யாரும் வாழவே முடியாது. மனிதன் ஒரு சமுக மிருகம் என்று சொல்லுவார்கள். நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அல்லது எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருந்தாலும் உங்களுக்கு அடுத்தவரின் உதவி கட்டாயம் தேவை.

அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். கேட்டால் தான் கிடைக்கும். தட்டினால் தான் திறக்கப்படும்.

உரையாடும் திறமையை குறைத்து மதிப்பிடாதீர்கள்

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?




Post a Comment

 
Top