நம் எல்லோருக்கும்  ஆயிரக்கணக்கான ஆசைகள்  உள்ளன. ஆசை தான் இவ்வுலகிலுள்ள எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் என்று புத்தர் அன்று சொன்னார். அத்தனைக்கும் ஆசைப் படு என்று இன்று நம் சத்குரு ஜக்கி வாசுதேவ் சொல்லுகிறார். எது உண்மை? எதை நாம் கடைப் பிடிக்க வேண்டும்? எந்த அறிவுரை  இந்த காலத்திற்குப் பொருத்தமாக  இருக்கும்? மேலே படியுங்கள்....


உண்மையில் ஆசை இல்லாமல் வாழ்வது என்று  ஒன்று கிடையவே கிடையாது. நீங்கள் எல்லாவற்றையும் துறந்து காட்டிற்குச்  சென்று தவம் செய்து முக்தி அடைய வேண்டும் என்று விரும்பினால் அதுவும் ஒரு விதமான ஆசை தானே? எந்த விதமான ஆசைகள் சரியானவை என்று மட்டும் பார்த்தால் போதுமானது என்றே நினைக்கின்றேன்.

நாம் நம் பெற்றோரை நேசிக்கலாம். பின் நண்பர்களை, உறவினர்களை, வாழ்க்கைத் துணையை, குழந்தைகளை நேசிக்கலாம். பிடித்த தொழிலைத்  தேர்ந்தெடுத்து அதை நாம் நேசிக்கலாம். பெரிய வீடு வாங்க ஆசைப்படலாம், சிறிய வீட்டிலும் சந்தோஷமாக வாழும் கலை நீங்கள் அறிந்திருந்தால். சொகுசு கார் வாங்க ஆசைப் படலாம், நடந்து போகவும் தயாராக இருந்தால்.

நியாயமான ஆசைகள் இருப்பதில் தப்பில்லை. ஒரு பெண் மீது ஆசைப் படலாம் அவள் வேறு ஒருவன் மனைவியாக அல்லது காதலியாக இல்லாத பட்சத்தில். ஒரு கார் உங்கள் உபயோகத்திற்கு வாங்கலாம். 10 கார்கள் வீட்டில் வாங்கி நிறுத்தினால் அது பேராசை தானே? தான் மட்டும் தான் நன்றாக இருக்க வேண்டும் மற்றவர் எல்லாம் தாழ்ந்து இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதுவும் பேராசை தான்.

தன்னலமற்று நீங்கள் எதை அல்லது யாரை நேசித்தாலும் அது தவறல்ல. நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையையோ, குழந்தைகளையோ தன்னலமற்று நேசிப்பதில் தவறில்லை.  அவர்களுக்குச்  சேவை செய்வதில், அவர்களுக்காக வாழ்வதில் தப்பில்லை. ஆனால் அதே சமயம் அவர்களில்லாமலும் உங்களால் வாழ முடிய வேண்டும்.

தாமரை மேலுள்ள நீர்  பட்டும் படாமலும் இருப்பது போல் இவ்வுலகத்தில் நாம்  சொந்தங்களிடத்திலும், சொந்தப் பொருட்களிடத்தும் பட்டும் படாமலும்  இருக்க வேண்டும்.

நியாயமான அத்தனை விஷயங்கள் மீதும் ஆசைப் படலாம். ஆனால் அந்த ஆசை தாமரை மேலுள்ள நீர் போல் பட்டும் படாமலும் இருக்க வேண்டும். அது தான் உன்னதமான வாழும் முறை ஆகும். இது சொல்லுவதற்குத் தான் எளிது என்று எனக்கும் தெரியும். இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை என்று நினைக்கிறேன். 

வாழ்க வளமுடன்!

              பணப் பிரச்சினைக்குத் தீர்வு 


கிரகங்களைப் பற்றிய சுவையான ஜோதிடச்  செய்திகள் 
08 Sep 2014

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top