எண்  கணிதம் என்பது இப்பொழுது பரவலாக புகழ் அடைந்து வருகிறது. நாமும் அதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்வதில் தப்பில்லை என்றே நினைக்கின்றேன். பிறப்பு எண் என்றால் என்ன? அதைக் கண்டுபிடிப்பதால் என்ன பயன் என்பது பற்றிக் காண்போம்.

உங்கள் பிறந்த தேதியிலிருந்து உங்கள் பிறப்பு எண்ணைக் கண்டு பிடிக்கலாம். உதாரணமாக உங்கள் பிறந்த தேதி 06-07-1989 என்றால், நீங்கள் பிறந்த நாளை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும். நீங்கள் பிறந்த நாள் 06. ஆகையால் உங்கள் பிறப்பு என் 6 ஆகும். பிறப்பு எண்ணை ஆங்கிலத்தில் (Birth number) என்று கூறுவர்.

நீங்கள் பிறந்த தேதி 29-09-1987 என்றால் எப்படி பிறப்பு எண்ணைக் கண்டுபிடிப்பது? நீங்கள் பிறந்த நாளான 29 ஐ ஒரு இலக்க எண் வரும் வரைக் கூட்ட வேண்டும்.

2+9=11 இந்த எண்ணை மீண்டும் கூட்ட வெண்டும்.

1+1=2

ஆக உங்கள் பிறப்பு எண் 2 ஆகும்.


பிறப்பு எண்ணைக் கொண்டு ஒருவரது குணநலன்களைக்  கூறலாம். மேலும் அவரது அதிர்ஷ்ட எண்ணையும், அதிர்ஷ்டக் கல்லையும் கண்டு பிடிக்கப் பிடிக்க பிறப்பு எண்ணைப் பயன்படுத்தலாம்.



பிறப்பு எண்ணையே அதிர்ஷ்ட எண்ணாக சில எண்  கணித நிபுணர்கள் சிபாரிசு செய்கிறார்கள். அதற்குரிய அதிர்ஷ்டக் கல்லையும் சிபாரிசு செய்கிறார்கள்.

ஜாதகத்தைப் பார்த்து அந்த ஜாதகத்திற்கு மிகவும் அதிர்ஷ்டமான கிரகம் எதுவோ அதற்குரிய எண்ணை  அதிர்ஷ்ட எண்ணாகவும், அதற்குரிய இரத்தினக் கல்லை அதிர்ஷ்டக் கல்லாகவும் சிபாரிசு செய்கின்றனர் சில ஜோதிடர்கள்.
ஆனால் என்னைப் பொறுத்த வரை பிறப்பு எண் ஒருவரது குணநலன்களை  அறியவே பயன்படுத்துகிறேன்.

வாழ்க வளமுடன்!

      கிரகங்கள் பற்றி சில சுவையான செய்திகள் 

வாஸ்து சாஸ்திரம் வேலை செய்கிறதா?

Post a Comment

 
Top