'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்று நிறைய பேர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஏதோ உலகத்திலேயே பெரிய கஷ்டம் அவர்களுக்கத்தான் வந்தது போல் இருக்கும் அவர்கள் போடும்பீடிகையைப்பார்க்கும் போது. விசாரித்தால் சக்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும். அல்லது அவர்கள் பையன் முதல் மதிப்பெண் வாங்கத்தவறியிருப்பான். அல்லது பெண்ணுக்கு வந்த சில வரன்கள் கிட்டே வந்து தப்பி போயிருக்கும். இதற்கு இவ்வளவு கூப்பாடு தேவையா?


சொந்தக்காரர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்று புலம்பித் தீர்ப்பார்கள். சின்ன பிரச்சினைகளை பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது அல்லவா?

இவர்களுக்கே எத்தனையோ முறை பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கலாம். சில அதிர்ஷ்டங்கள் அடித்திருக்கலாம். அதையெல்லாம் 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நல்லது நடக்கிறது' என்று சொல்லவே மாட்டார்கள். நல்ல விஷயங்கள் மறக்கப்படுவதும், மறைக்கப்படுவதும், கெட்ட விஷயங்கள் பிரபலப்படுத்தப்படுவதும்  இப்பொழுது சகஜமாகிப் போய் விட்டன.

கஷ்டங்கள், பிரச்சினைகள்,தோல்விகள் அவமானங்கள் இல்லாத வாழ்க்கை எங்கே இருக்கிறது? எப்பொழுதுமே நல்லதே நடந்தால் வாழ்க்கை 'போர்' அடித்து விடும் அல்லவா? துன்பங்கள்  வரும்போது துவண்டு விடாதீர்கள். அதையும் வேண்டப்பட்ட விருந்தாளி போல் வாழ்க்கையில் வந்து செல்ல அனுமதியுங்கள். துன்பங்களும், தோல்விகளும் வாழ்க்கையின் அங்கங்களே என்பதனை  உணர்ந்தால் நல்லது என்றே நினைக்கிறேன். தோல்விகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் செய்த தவறுகளை கண்டுபிடித்து திருத்திக்கொள்ளுங்கள். வாழ்க்கை வசந்தமாகும்.

வாழ்க வளமுடன்!

           ஏன் இந்தப் போலித்தனமான வாழ்க்கை?

                          பணப் பிரச்சினைக்குத் தீர்வு 


Post a Comment

 
Top