எதையும் அழிப்பது எளிது: உருவாக்குவதோ, கடினமோ கடினம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை ஞாபகப் படுத்துவது நல்லது என்றே நினைக்கின்றேன். நீங்கள் தொலைக் காட்சியில் ஒரு பெரிய கட்டடம் எப்படி ஒரு நொடியில் தரை மட்டமாகிறது என்பதைப் பார்த்திருப்பீர்கள். அழிப்பது எவ்வளவு எளிது என்பது அதைப் பார்த்தாலே புரிந்து விடும் நமக்கு.


15 வருடங்கள் கண் கொத்திப் பாம்பாய் வளர்த்த பையன் கல்லுரி விடுதியில் ஒரே நாளில் கெட்டுப் போய் விடுவதைப் பார்க்கிறோம். 20 வருடங்கள் பார்த்து பார்த்து சேமித்த பணம் நோய் வந்தால் இரண்டே நாளில் காலியாகி விடுவதையும் நாம் பார்க்கின்றோம்.

10 ஆண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த நல்ல பெயர் சில சாமியார்களுக்கு ஒரே நாளில் பறந்து  போவதையும் நாம் பார்த்து இருக்கிறோம். பல நூற்றாண்டுகளாக விரிக்கப்பட்ட சாம்ராஜ்ஜியங்கள் ஒரே இரவில் வீழ்ந்ததையும் நாம் படித்து இருக்கிறோம்.

ஆக அழித்தல் எளிது. உருவாக்குவது தான் மிகவும் கடினம். நாம் பணம் சம்பாதித்து சேமிப்பது மட்டும்,பத்தாது. அது அழிய விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல பெயர் எடுத்து விட்டால் மட்டும் போதாது.அந்த நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை  நன்கு பாதுகாக்க வேண்டும். உயர் பதவி பெற்றால், அது போய்  விடாத அளவுக்கு மேலும் உழைக்க வேண்டும். புகழ் பெற்று விட்டால் அப கீர்த்தி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பூர்வீக சொத்து இருந்தால் அது கரைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒழுக்கம் உடையவர் என்று பெயர் வாங்குவது கடினம். அந்த நல்ல பெயரை  ஒரே நாளில் நாம் இழந்து விடலாம்.

நினைவில் கொள்ளுங்கள். எதையும் அழிப்பது எளிது. உருவாக்குவதோ, கடினமோ கடினம். 

நீதி: எதையும் அழித்து விடாதீர்கள். அழிய விடாதீர்கள். வாழ்க வளமுடன்!

           பணப் பிரச்சினைக்குத் தீர்வு 

               வாஸ்து சாஸ்திரம் உண்மையா?

Post a Comment

 
Top