நாம் எல்லோரும் மற்றவர்கள் நம் விருப்பப்படி வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது நமக்குப்  பிடித்தவைகள் மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்றும், நமக்குப் பிடிக்காதவைகள் மற்றவர்களுக்கும் பிடிக்கக் கூடாது என்றும் எதிர்பார்க்கிறோம். அதனால் நாம் மற்றவர்களை மாற்ற முயற்சிக்கிறோம்.


கணவன் தன மனைவி தன விருப்பம் போல் ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். மனைவியோ கணவனை அவனே அறியாவண்ணம் தன்  இஷ்டப்படி ஆட்டிப்படைக்க முயல்கிறாள். பெற்றோர் பிள்ளைகளைத்  தம் விருப்பம் போல் வளர்க்க முயல்கின்றனர்.

மற்றவர்களை மாற்ற நினைப்பதும், மாற்ற முயற்சி செய்வதும் சரிதானா? ஏன் மற்றவர்களை இயல்பாக இருக்க விடக் கூடாது?

நாம் எல்லோரும் நமக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்றே வாழ்கிறோம். அதாவது ஊருக்குத் தான் உபதேசம் எல்லாம். நாம் நம் இஷ்டப்படி தான் வாழ்வோம். நாம் எப்போதும் மற்றவர்களை மாற்ற முயற்சிப்போமே அல்லாமல் நாம் மாறவே மாட்டோம்.

மற்றவர்களை மாற்ற முடியுமா? எனக்குத் தெரிந்த வரை ஒரு கண்ணுக் குட்டியைக் கூட அதன் இஷ்டம் இல்லாமல் தண்ணியைக் குடிக்க வைக்க முடியாது. மற்றவர்களுக்கும் நம்மைப் போலவே 'ஈகோ' உள்ளது. அவர்கள் நாம் சொல்லுவது சரி என்று தெரிந்தாலும் அதை ஒப்புக் கொள்ள மறுப்பார்கள். நம் விருப்படி மாற ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள்.

மற்றவர்களை மாற்ற முயற்சி செய்வது வீண் வேலை என்றே நினைக்கின்றேன்.

நம் மீது தப்பு இருந்தால் மாற்றிக் கொள்ளலாம்.  ஆனால் மற்றவர்களுக்காக நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

மற்றவர்களை மாற்ற முயற்சி செய்யாதீர்கள். மற்றவர்களுக்காக நீங்களும் உங்களை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் மாற்றங்கள் நல்லவை என்று தெரிந்தால் 'ஈகோ' இல்லாமல் மாறுவது நன்று என்றே நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

              ஏன் இந்தப் போலித்தனமான வாழ்க்கை?

                  மற்றவர்களுக்காக வாழ வேண்டாம் 


Post a Comment

 
Top