இப்பொழுது என்றும் இல்லாத அளவுக்கு தம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதில் பெற்றோர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுகின்றனர். கவர்ச்சியான பெயர்களை தம் பிள்ளைகளுக்கு சூட்டுகின்றனர். சிலர் எண் கணிதம் (Numerology) படி பெயர் சூட்டுகின்றனர்.






பெயரில் என்ன இருக்கிறது? எல்லாப் பெயர்களும் நல்லப் பெயர்களே என்று சொல்லுபவர்கள் கொஞ்சம் பேர். சோம்பேறிகள், மற்றும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் எண் கணிதம் படி பெயர் வைப்பார்கள் என்று வாழ்க்கையில் ஜெயித்த சிலர் சொல்லுவதையும்  நீங்கள் கேட்டு இருக்கலாம்.

நல்ல பெயர் , அதிர்ஷ்ட பெயர் என்பதெல்லாம் பொய்யா?

என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. இந்த பிரபஞ்சத்தில் ஏற்படும் ஒவ்வொரு சத்தமும் நல்ல அல்லது கெட்ட அதிர்வுகளை (Positive or Negative vibrations) ஏற்படுத்துகின்றன. 'ஓம்' என்கின்ற சத்தம் மிக நல்ல அதிர்வுகளை ஏற்படுத்துவதாக நிருபிக்கப்பட்டு இருக்கிறது.

இனிமையான இசை நம் உடலுக்கும் ஏன் மனதுக்கும் நல்லது செய்கின்றது. நல்ல இசை தாவரங்களைக் கூட நன்றாக வளரச் செய்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகின்றார்கள்.

எனக்குத் தெரிந்த சில நல்ல பெயர்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

விஜய், கௌதம், கார்த்திக், அஷ்வின், பிரவின், அருண், ஆனந்த், அர்ஜுன், அஜய் , அபிஜித், ரோஷன், அஜித், கிருஷ், ஷிவ் தேவ்,  சூர்யா, ஆதித்யா, மிதுன், கிருஷ்ணகாந்த், சாய் விக்னேஷ், சக்ரவர்த்தி, ராஜராஜன், பரத்வாஜ், வியாசா  ......

பொதுவாக ஆண்களுக்கு ஜெய, விஜய, ஜித், வின் என்று வரும் பெயர்களை வைக்கலாம். பெண்களுக்கு ஸ்ரீ என்று வரும் பெயர்களை வைக்கலாம். ராஜ்யஸ்ரீ, நித்ய ஸ்ரீ, ஜெய ஸ்ரீ, இந்து ஸ்ரீ, சுப ஸ்ரீ  என்று வைக்கலாம். ஐஸ்வர்யா, சௌந்தர்யா, பிரிய தர்ஷிணி  என்றும் வைக்கலாம்.

விஜய் என்ற பெயர் எங்கு எல்லாம்   வெற்றி பெற்று இருக்கிறது என்று பார்க்கலாம். விஜய் அமிர்தராஜ்,  நடிகர் விஜய், விஜய் சேதுபதி, விஜய் காந்த், விஜய் அன்டனி, விஜய் டிவி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

பெயர் மந்திரத்திற்கு சமமானது. பலர் பல தடவை அதை தினமும் உச்சரிக்கும்போது நல்ல அதிர்வுகள்  ஏற்பட்டு, நல்ல  பயன்கள் அந்த பெயருக்குரியவருக்குக் கிடைக்கின்றது என்பது நம்பிக்கை.

விஞ்ஞானிகள் இதை மூட நம்பிக்கை என்று சொல்லாம். அதே விஞ்ஞானிகள் கடவுள்  நம்பிக்கை உடையவர்களாகவும் இருக்கக்கூடும். 

நம்பிக்கை உள்ளவர்கள் நல்ல பெயர்களை தம் பிள்ளைகளுக்கு சூட்டலாம். வாழ்க வளமுடன்!


                                       ஜோதிடம் பொய்யா 


Post a Comment

 
Top