நிராகரிப்பு என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. நீங்கள் பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், புகழ்ப் பெற்ற  அரசியல் தலைவராக இருந்தாலும், எவ்வளவு சக்தி வாய்ந்த மனிதராக இருந்தாலும், வாழ்க்கையில் நிச்சயம் நிராகரிக்கப் பட்டிருப்பீர்கள் (rejection). 





சிறு வயதில் உங்களது சுதந்திரம்  நிராகரிக்கப் பட்டிருக்கலாம். நீங்கள் விரும்பிய படிப்பு நிராகரிக்கப்பட்டிருக்கலாம். பருவ வயதில் நீங்கள் விரும்பியவர் உங்களை நிராகரித்திருக்கலாம்.

தகுதி இருந்தும் இண்டர்வியூவில் நீங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் விதி கூட சதி செய்து உங்களின் வெற்றியை பல சமயங்களில் நிராகரித்திருக்கலாம்.

அமிதாப் பச்சன் முதல் ஹேம மாலினி வரை எத்தனையோ பிரபலங்கள் முதலில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டவர்களே. அமிதாப் பச்சன் கல்கத்தா வானொலியால் நிராகரிக்கப்பட்டவர். பிற்காலத்தில் சூப்பர் ஸ்டாராக பல வருடங்கள் இந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தார். வெண்ணிற ஆடை என்கின்ற தமிழ் படத்திற்கு கதாநாயகி தேர்வு நடந்த போது ஹேம மாலினி நிராகரிக்கப்பட்டார். அவரே பிற்காலத்தில் இந்தி நடிகையாகி இந்தியர்களின் கனவுக்கன்னியாக பல வருடங்கள் வலம் வந்தார்.

ஆக, வாழ்க்கையில் நிராகரிப்பை சந்திக்காதவர்களே  இல்லை என்று சொல்லலாம். நீங்கள் நிராகரிக்கப்படும் போது, சோர்ந்து விடாதீர்கள். நிராகரிப்பை நிராகரிப்பு செய்யுங்கள். உங்களை  நிராகரித்தவர்களே உங்களை ஆராதிக்கும் வண்ணம் நடந்து காண்பியுங்கள். அது தான் நிராகரிப்பை நிராகரிக்கும் செயல் ஆகும்.

உண்மையில் உங்களிடம் தகுதி குறைவு இருந்து அதனால் நீங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். 

உங்களை அநியாயமாக நிராகரித்திருந்தால் நிராகரிப்பை  லட்சியமாக மாற்றிக் கொள்ளுங்கள். பல பிரபலங்கள் அப்படி ஜெயித்தவர்களே.

நிராகரிப்பை எழுச்சியைத் தூண்டும் இலட்சியமாக மாற்றிக் கொள்ளுங்கள். வாழ்க்கை உங்கள் வசப்படும். 

வாழ்க வளமுடன்!

              விதி வலியது தானா ?

           ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டோய் 



Post a Comment

 
Top