ஒருவரை நீங்கள் அளவுக்கதிகமாய் நேசிக்கும்போது அவர்கள் வேறு ஒரு நபருடன் நெருங்கி பழகினால்  பொறாமை ஏற்படுவது இயல்பு தான். அதுவும் நீங்கள் காதலிக்கும் பெண் வேறு ஒரு ஆணுடனோ, அல்லது ஆண்  வேறு பெண்ணுடனோ பழகினால் நீங்கள் பொறாமையினால் வெந்து போனாலும் போவீர்கள்.



காதலில், பொறாமை, தனக்கு மட்டுமெ சொந்தம் என்கிர மனப்பான்மை சரியா? உண்மையான காதல் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்பர் சிலர். நம்பிக்கை இல்லாதவர்கள் தான் சந்தேகப்படுவார்கள் என்பது அவர்கள் கருத்து.

காதல் என்பது காமமும் சேர்ந்தது தான். எதிரின ஈர்ப்பு என்பதுமிகவும் வலிமையானது. அது எப்போது யாருக்கு பற்றிக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. ஆகவே தனது கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ, தேவைக்கதிகமான சுதந்திரம் கொடுப்பது ஆபத்தானது என்றும் சிலர் நினைக்கிறனர். அது அபத்தமானது என்று சொல்லுபவர்களும் இன்று ஏராளம் உண்டு. 

நமது கலாச்சாரம், ஒருவர் வளர்ந்த சூழ்நிலை ஆகியவை கூட ஒருவர் தனது துணை விஷயத்தில்,  பொறாமை, தனக்கு மட்டுமெ சொந்தம் என்கிர  மனப்பான்மைக்குக் கொள்வதற்கு  காரணமாகக் கூடும்.

ஒருவர் தனது துணை யாருடனும்  எவ்வளவு நெருங்கி பழகினாலும் கவலைப் படவில்லை என்றால் அவருக்குத் தன்  துணை மேல் எந்த அக்கறையும், பாசமும் இல்லை என்று தான் அர்த்தம் என்றும் சிலர் சொல்லக்கூடும்.

ஒருவர் தனது துணையைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான சுதந்திரம் கொடுக்க வேண்டும்  என்று பலர் நினைக்கின்றனர்.

பட்டாம்பூச்சியை உள்ளங்கையில் வைத்து  இருப்பது போல் இதைக்கையாள வேண்டும். அதிகம் அழுத்தினால் பட்டாம்பூச்சி செத்து விடும். ரொம்பவும் கையைத் திறந்தால் பட்டாம்பூச்சி பறந்து விடும்.

இந்த விஷயத்தில் ஒவ்வொருவரின் கருத்தும் வெவேறு விதமாக இருக்கக் கூடும்.

மொத்தத்தில் ஒரு ஜோடி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதும், தேவையான சுதந்திரம் அவர்களுக்குக் கொடுக்கப் பட வேண்டும் என்பதும் முக்கியமான விஷயங்களாகத்  தோன்றுகிறது.

                        யார் ஆன்மிகவாதி?

அவமதிப்பை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?

Post a Comment

 
Top