சில விவாதங்கள் முடிவில்லாதவை. கடவுள் இருக்கிறாரா? இல்லையா?, அதிர்ஷ்டம் என்று ஒன்று உள்ளதா  இல்லையா? போன்றவை.






இவ்வுலகில் நிறைய பேர் அதிர்ஷ்டத்தை நம்புகின்றவர்கள் தான். வாழ்க்கையில் வெற்றிப் பெற்ற சில பேர் அதிர்ஷ்டம் சோம்பேறிகளின் சால்ஜாப்பு என்பர். அவர்களே பின் ஒரு காலத்தில் சில தோல்விகளை சந்திக்கும்போது அதிர்ஷ்டம் உண்டு என்று  கொக்கரிப்பர்.

எனக்குத் தெரிந்த வரை அதிர்ஷ்டம் என்றும் உண்டு. துரதிர்ஷ்டம் என்றும் உண்டு.கடுமையான் உழைப்பு தான் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்பது எனக்கும் தெரியும். உழைப்புடன் புத்திசாலித்தனமும் சேரும் போது தான் பெரிய வெற்றிகள் கிட்டும்.

எனது கேள்வி: புத்திசாலித்தனத்துடன் கடுமையாக உழைப்பவர்கள் எல்லோரும் வெற்றி பெறுகிறார்களா? அதிகம் உழைக்காமல், பெரிய புத்திசாலித்தனமும் இல்லாத எத்தனை பேர் வெற்றி பெற்றுருக்கின்றனர்?

எவ்வளவோ புத்திசாலித்தனமாகவும், கடுமையாகவும் உழைத்த சில பேர் பெரிய தோல்விகளை சந்தித்ததை நான் பார்த்திருக்கிறேன்.

பொதுவாக வெற்றி முக்கோணத்திற்கு உழைப்பு, புத்திசாலித்தனம், அதிர்ஷ்டம் என்னும் மூன்று பக்கங்கள் தேவை.

எதிலும் விதி விலக்கு உண்டு.  விதி விலக்குகள் விதிகளாகாது.

சுருங்க சொல்ல வேண்டுமானால் இவ்வுலகில் அதிர்ஷ்டமும் உண்டு. துரதிர்ஷ்டமும் உண்டு.

அதற்காக வெறும் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்புவது தவறு. மாறாக, எத்தனை துரதிர்ஷ்டம் இருந்தாலும், எத்தனை தோல்விகளை சந்தித்திருந்தாலும் வாழ்க்கையில் தொடந்து கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.


                  வாஸ்து சாஸ்திரம் உண்மையா?

                          விதி வலியதுதானா?

Post a Comment

  1. Nice blog. It is wonderful to read in Tamil. Of course I could reply in Tamil as well, but that calls for installing fonts on my machine. Will take time to do that.

    Congratulations on this new venture.

    ReplyDelete
    Replies
    1. நன்றி உமா, உங்கள் கமெண்ட் இந்த வலைப்பதிவின் வெற்றியை உறுதிப்படுத்தி விட்டது. மிக்க மகிழ்ச்சி.

      Delete

 
Top