எல்லோருக்கும் ஒரு சில தனித்திறமைகள் இருக்கும். அவர்கள் எந்த துறையில் திறமையுடன் விளங்குகிறார்களோ அந்தத் துறை அவர்களுக்குப்  பிடித்திருந்தால் அந்தத் துறையிலேயே அவர்கள் தங்கள்  திறமையையே மேலும் வளர்த்துக் கொள்ளவேண்டும். பின் அந்தத்  துறையிலேயே வேலை அல்லது தொழில் செய்தால் அவர்கள் நிச்சயம் அந்த துறையில் சாதிப்பார்கள். மேலும் அவர்களுக்கு வேலையில் முழு திருப்தி கிடைக்கும். பிடித்த வேலையை செய்யும் போது அவர்களது முழுத் திறமையும் வெளிப்படும். மேலும் அவர்கள் கடினமாக உழைத்தாலும் அது அவர்களுக்கு கடினமாகத் தெரியாது. உங்களுக்குப் பிடித்த வேலையை செய்யுங்கள்.


இன்று நாம் பெரும்பாலும் நமக்குப் பிடிக்காத வேலைகளில் தான் ஏனோ தானொவென்று  குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறோம். பிடிக்காத படிப்பை இன்று பலர் படிக்கிறார்கள். பெற்றோர்கள் தேர்தெடுத்த படிப்பு அல்லது அவர்கள் வாங்கிய மதிப்பெண்களுக்குக் கிடைத்த படிப்பை படிக்கிறார்கள். அட, படித்த பின் வேலையாவது அவர்கள் படித்த அந்த படிப்புக்கு சம்பந்தமான வேலை கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்த எத்தனையோ பேர் இன்று சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணி  புரிகிறார்கள். மேலும் இன்ஜினியரிங் படித்த எத்தனையோ பேர் இன்று BPO வில் பணி புரிகிறார்கள் என்பது தான் கொடுமையிலும் கொடுமை.

 சரி, பணத் தேவைகளுக்காகவோ அல்லது வேறு நிர்பந்தங்களாலோ நீங்கள் உங்களுக்குப் பிடிக்காத வேலையில் சேர்ந்து விட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதன் பின் நீங்கள் அந்த வேலையை விரும்பி செய்வது தான் புத்திசாலித்தனம் ஆகும். அப்பொழுது தான் நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது நிஜம்.

பிடித்த வேலையை செய்யுங்கள்! இல்லை என்றால் கிடைத்த வேலையை விரும்புங்கள்!! இது காதலுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன்!

அனாவசிய செலவுகளை தவிர்ப்பது எப்படி?

உங்கள் பணப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?

Post a Comment

 
Top