கற்பு என்பது முக்கியமாக ஒரு ஆண் தனது பெண்ணிடமும், பெண் தனது ஆணிடமும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. ஒரு ஆண் தனது மனைவியும் தனது குடும்பத்து பெண்களும் கற்போடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அதே போல் தான் பெண்ணும். தனது கணவனும் தன் வீட்டு ஆண்களும் கற்போடு இருக்க வேண்டும் என்று தான் எல்லாப் பெண்களும் எதிர்பார்க்கிறார்கள்.


கற்பு என்றால் என்ன? ஒவ்வொருவரும் கற்பை ஒவ்வொரு மாதிரி பொருள் கொள்வார்கள். கற்பின் அளவுகோல் நாட்டிற்கு நாடு வேறு படும். ஆணுக்கும் பெண்ணுக்குமே அது வித்தியாசப்படுகிறது. 50 வருடங்களுக்கு முன் அதன் நிலை வேறு விதமாக இருந்தது. அப்பொழுதெல்லாம் இந்திய ஆண் கன்னிப் பெண்ணையே கல்யாணம் செய்ய விரும்புவான்.. இப்பொழுது நிலைமை சற்று மாறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இன்றைய ஆண் தனது மனைவி திருமணத்திற்குப்  பின் தனக்கு உண்மையாக இருந்தால் போதும் என்று நினைக்கிறான்.

கற்பு என்பது ஒரு மாயையாகத் தோன்றுகிறது. ஏனென்றால் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ யாருக்கும் தெரியாமல் தப்பு செய்து கற்பு உடையவர்களாக இந்த சமுதாயத்தில் வலம் வர முடியும்.

தனது கணவனை அல்லது மனைவியைத் தவிர பிறர் மேல் எந்த சபலமும் இல்லாமல் வாழும் உத்தமர்கள் தான் போற்றப்படவேண்டிய முதல் தர கற்புடயவர் எனலாம். அவர்கள் தங்கள் துணை மீது அதீதமான காதல் கொண்டிருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா என்ன? மற்றொருவர் மீது ஆசை அல்லது சபலம் ஏற்பட்டாலும் தனது துணையை வருத்தும் செயல் என்பதால் அதை தவிர்க்கும் ஆணும் பெண்ணும் இரண்டாம் தர கற்புடையவர் எனலாம். யாருக்காவது தெரிந்து விட்டால் பிரச்சினை ஆகி விடுமே என்று  பயந்து அதை தவிர்ப்பவர்கள் கடை நிலை கற்புக்கரசர்கள் எனலாம்.

ஆண்களில் 99 சதவிகிதம் பேர் கற்பிழந்தவர்கள் என்று சொல்லுவார்கள். மீதி ஒரு சதவிகிதம் பேர்? அவர்கள் வாய்ப்புக்காக இன்னும் காத்துக் 
கொண் டிருக்கிறார்கள் என்று வேடிக்கையாக சொல்லுவார்கள். அதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தானே செய்கிறது.

இன்று கற்புடையவர்களைக்  காண்பது அரிது. அப்படி கற்போடு இருப்பவர்கள் மூன்றாவது வகையான கற்புடையவர்கள் என்பது தான் கொடுமையான உண்மை ஆகும்.

மனிதன் உண்மையில் ஒரு தார உயிரினம் தானா? 

அல்லது கற்பு என்பது வெறும் மாயையா?

                 திருமண உறவை முறிக்கும் அகங்காரம் 

இறுதி வரை அன்யோன்யமாய் வாழும் தம்பதிகள் 

Post a Comment

 
Top