நான் சிறு வயது முதல் நிறைய புத்தகங்கள் வாசித்து வருகிறேன். ஒவ்வொருவருக்கும் அபிமான எழுத்தாளர்கள் என்று ஒரு சிலர் இருப்பார்கள். அதே போல் ஒவ்வொருவரையும் சில புத்தகங்கள் மிகவும்  பாதித்திற்கும்.  ஒவ்வொருவருக்கும் ஒரு சில புத்தகங்கள் பிடித்திற்கும் என்று சொல்லலாம். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றியும், எனக்குப்  பிடித்த  புத்தகங்களைப் பற்றியும் இந்த வலைப்பதிவில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.  


எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் என்று பார்த்தால் அது ஒரு பெரிய பட்டியலே   இருக்கும் என்றே சொல்லுவேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் என்று சொன்னால், கல்கி, சாண்டில்யன், சுஜாதா போன்றோரே முதலில்  என் ஞாபகத்திற்கு வருவார்கள். மேலும், சிட்னி ஷெல்டன், ஜேம்ஸ் ஹட்லி ச்சேஸ், அகதா கிறிஸ்டி, டேனிஸ்  ராப்பின்ஸ், டேல் கார்னகி, நார்மன் வின்சன்ட்  பீல், ஜெப்ரி ஆர்ச்சர், நெப்போலியன் ஹில்   போன்றோரும் எனது அபிமான எழுத்தாளர்களே.

என்னை  மிகவும் பாதித்த மற்றும் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் என்றால், மகா பாரதம், பகவத் கீதை, இராமாயணம், பொன்னியின் செல்வன், கடல் புறா, 'How to win friends and influence them',  'The power of positive thinking', 'Stop worrying and start living',  'The law of success', 'Think and grow rich' போன்றவற்றை சொல்லலாம்.

இன்னும் எத்தனையோ புத்தகங்கள் என் நினைவிற்கு வருகின்றன. அவை அதிகமாக வெளிச்சத்திற்கு வராதவை. எல்லோருக்கும் தெரிந்த புத்தகங்களைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் யார்? உங்களுக்கு எந்தெந்த புத்தகங்கள் மிகவும் பிடிக்கும்?

பக்தியும் பகவத் கீதையும் வயதானவர்களுக்கு மட்டும் தானா?

ஜோதிடம் விஞ்ஞானம் ஆகா முடியுமா?

19 Nov 2014

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top