வீண் விவாதங்களில் நேரத்தை நம்மில் பலர் வீணடிக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. விவாதத்தால் நமக்கு கிடைப்பது தான் என்ன? ஒரு லாபமும் இருக்காது என்பதை சூடம் அடித்து சத்தியம் செய்யலாம். ஆனால் விவாதங்களினால் நிச்சயம் நிறைய தீமைகள் நமக்கு நடக்கும் என்று மட்டும் உறுதியாக சொல்லலாம். இருந்தாலும் நாம் விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறோம் என்பது தான் கசப்பான உண்மை ஆகும்.


நாம் ஏன் விவாதங்களில் ஈடுபடுகிறோம்? நமது "ஈகோ" தான் நம்மை விவாதங்களில் ஈடுபடவைக்கிறது. நாம் நமது கருத்து தான் சரியானது என்று வலியுறுத்த விவாதங்களில் ஈடுபடுகிறோம். விவாதத்தின் போதே நாம் கூறியது தவறு என்பதை அறிய நேர்ந்தாலும் நாம் நம் தவற்றை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை. 

இறுதியில் நமது விவாதங்களினால் நமக்கு கிடைப்பது தான் என்ன? நாம் விவாதத்தில் வெற்றி பெற்றாலும் நாம், நம் நல்ல நண்பர்களையோ, நெருங்கிய உறவினர்களையோ இழப்போம் என்பது தான் நிஜம். உங்கள் வேலை கூட பறி போகலாம். உங்கள் காதல் துணை உங்களைப் பிரியவும் கூட நேரலாம். 

சுருங்க சொல்ல வேண்டுமானால் விவாதங்களினால் எந்த பயனும் கிட்டாது. ஆனால் இழப்புகள் அதிகம் இருக்கும்.

விவாதம் பண்ணுபவன் முட்டாள் என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கிறதா என்ன?

வீண் விவாதங்களை தவிருங்கள். ஆரோக்கியமான விவாதங்கள் நன்மை பயக்கும் என்பது உண்மை தான். ஆனால் ஆரோக்கியமான விவாதங்களை இன்று பார்ப்பது மிகவும் அரிது என்பது தான் உண்மை.

விவாதங்களை தவிருங்கள். உறவுகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அது தான் புத்திசாலித்தனம் என்று கூறி முடிக்கிறேன். வாழ்க வளமுடன்!

                        உங்கள் பணப் பிரச்சினைக்கு தீர்வு 

                      எதிர் பாராததை எதிர் பாருங்கள் 

Post a Comment

 
Top