நாம் எல்லோரும் வெற்றி பெறும் போது அதற்கு நாம் தான் காரணம் என்று பறை சாற்றிக் கொள்வோம். ஆனால் தோல்வி ஏற்படும் போதோ பழியைக் கூசாமல் வேறு யார் மீதாவது போட்டு விடுவோம். வியாபாரத்தில் லாபம் வந்தால் அதற்கு நம் முயற்சியும், உழைப்பும், திறமையும்  தான் காரணம் என்போம்.அதுவே நஷ்டம் ஏற்பட்டு விட்டால் நஷ்டத்திற்கு அவர் தான் காரணம், இவர் தான் காரணம் என்போம். ஒருவர் மீதும் பழி சுமத்த முடியா விட்டால் துரதிர்ஷ்டம் தான் நஷ்டத்தைத் தந்தது என்போம்.


உண்மையான தலைவன் தோல்விக்கு முழு பொறுப்பேற்பான். தைரியமானவர்கள் , தன்னம்பிக்கையுடையவர்கள் ஒரு போதும் தோல்விக்கோ, நஷ்டத்திற்கோ பிறர் மீது பழி சுமத்த மாட்டார்கள். தவறுக்குப் பொறுப்பேற்பார்கள். தவற்றை  திருத்திக் கொண்டு மீண்டும் முயற்சிப்பார்கள். வெற்றியும் பெறுவார்கள்.

எதற்கெடுத்தாலும் மற்றவர் மீது பழிப் போடுவது சரியாகுமா? என்ன வெயில், என்ன கொடுமையான போக்குவரத்து நெரிசல், அவன் கேட்டவன், இவன் மோசமானவன், அவன் முட்டாள், இவன் ஏமாற்றுக்காரன் என்று குறை சொல்வதை நிறுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? 

மன தைரியமும், தன்னம்பிக்கையும் இல்லாதவர்கள் தான் மற்றவரைக் குறை சொல்லுவர். 

அடுத்தவரைக் குறை சொல்லுவதையும், பழிப்பதையும், அவர்கள்  இல்லாத போது அவர்களை விமர்சிப்பதையும்  என்று நிறுத்துவோம்?

மற்றவர்கள் மீது பழி சுமத்தும் நேரத்தில் உருப்படியாக ஏதாவது நல்ல காரியத்தை பண்ணுவோமே? வாழ்க வளமுடன்! 

உண்மையான சந்தோஷம் அடைவது எப்படி?

ஏன் இந்த போலித்தனமான வாழ்க்கை?


Post a Comment

 
Top