புற்று நோய் வந்த பின் 'ஐய்யோ இராமா' என்று கூச்சலிடுவதற்குப் பதிலாக அது வருமுன் காப்பதே புத்திசாலித்தனம் ஆகும்.

புற்று நோய் வராமல் தடுப்பது எப்படி?



நமது சரியான வாழும் முறையால்  புற்று நோய் வராமல் நிச்சயமாகத்  தடுக்கலாம்.


  • பழங்களையும், காய்கறிகளையும் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • மாமிச உணவை முற்றிலும் தவிருங்கள்.
  • 'கிரீன் டீ' (green tea) தினமும் 5 கப் அருந்துங்கள்.
  •  இயற்கை உணவு (organic food) எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பூண்டு உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இஞ்சி தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 
  • சிறிதளவு  மஞ்சள் அனுதினமும் உணவுடன் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சளுக்கு புற்று நோயைக் கட்டுப்படுத்தும் மகிமை உள்ளது.
  • மாதுளம் பழம் தினசரி உட்கொள்ளலாம்.
  • மேலும், கீரைகள்,முட்டைகோஸ்,  காலிஃப்ளவர், காளான், காரட், வெங்காயம், கார்ன் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். 
  • வறுத்த, எண்ணையில் பொரித்த உணவை தவிர்க்கவும்.
  • பிட்சா போன்ற 'ஃ பாஸ்ட் புட்' ஐ தவிர்க்கவும்.
  • புகை அறவே பிடிக்கக் கூடாது.
  • சிகப்பு ஒயின் அளவாக அருந்தலாம்.
  • தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • எல்லாவற்றிற்கும் மேலாக யோகா மற்றும் தியானம் தினமும் செய்ய  வேண்டும்.
நம் வாழும் முறையை இப்படி முறைப் படுத்திக் கொண்டால் புற்று நோயை வெல்லலாம்.

வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top