பணப் பிரச்சினை என்பது இன்று இறைவனைப் போல் அங்கெங்கினதாபடி எங்கும் நிறைந்து இருக்கிறது. இன்று காதல் இல்லாதவனைக் கூட பார்த்து விடலாம். ஆனால் கடன் இல்லாதவரைப் பார்ப்பது அரிது என்று சொல்லும் வண்ணம் உள்ளது.



 பணப் பிரச்சினைக்குத் தீர்வு தான் என்ன?

முதலில் பணப் பிரச்சினைக்குக் காரணம் என்ன என்பதைப்  பார்ப்போம்.

சோம்பேறித்தனம் என்பது பணப் பிரச்சினைக்கு  ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. கடுமையான் உழைப்பாளிகளே கடன் வாங்கி காலம் தள்ளும் இந்த கலி காலத்தில் சோம்பேறிகள் எப்படி பணப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள்?

சிலர் கடுமையாக உழைப்பார்கள். ஆனால் அவர்களால் பணம் சம்பாதிக்கவே  முடியாது. காரணம் என்னவென்றால் அவர்களுக்குப்  புத்திசாலித்தனம் போதாது. புத்திசாலித்தனத்துடன் சேர்ந்த உழைப்பே வெற்றி பெறும். எது முக்கியம், எது முக்கியமில்லாதது என்பது  தெரிந்திருக்க  வெண்டும். முக்கியமான வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உழைத்தால் வெற்றி நிச்சயம்.

வரவு செலவு கணக்கு அடிக்கடிப்  பார்த்து வரவை விட செலவு கம்மியாக இருக்கும்படி செலவு  செய்பவர்களுக்குப்   பணப்பிரச்சினை வரும் வாய்ப்பு மிகவும் குறைவே. நீங்கள் மாதம் இரண்டு இலட்சம் ரூபாய் சம்பாதித்தாலும், மூன்று இலட்சம் செலவு செய்பவராயின் உங்களைப் பணக்காரர் என்று எப்படி சொல்ல முடியும்? என்றாவது ஒரு நாள் நீங்கள் கடன்காரனுக்குப் பயந்து ஒளிந்து வாழ வேண்டி வரும் என்பது நிஜம்.

பக்கத்து வீட்டுக் காரர் கார் வாங்கியதற்காக நீங்கள் கார் வாங்கினால் நீங்கள் கடன்காரராக மாற வேண்டி வரும். ( அப்பாடா  எத்தனை கார்டா  சாமி)
உங்கள் சொந்தக்காரர் முப்பது இலட்சம் செலவு செய்து மகள் திருமணம் செய்ததால், நீங்களும் பல இலட்சம் செலவு செய்து உங்கள் மகள் திருமணத்தைச்  செய்தால் பணப் பிரச்சினை வராமல் என்ன செய்யும்?

தவறான முதலீடுகள்,  வாழ்க்கையில் செய்யும் சில தப்புக் கணக்குகள் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தலாம். துரதிர்ஷ்டம் கூட சில சமயம் உங்கள்  பணப்பிரச்சினைக்குக் காரணமாகலாம். 

கடுமையாக உழையுங்கள். புத்திசாலித்தனத்துடன் உழையுங்கள். வரவுக்குத் தக்க செலவு செய்யுங்கள். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். இறைவனை முழு மனதோடு ஆராதியுங்கள்.

பணப்பிரச்சினை நிச்சயம் தீரும். வாழ்க வளமுடன்!

                      விதி வலியது தானா?

   நீங்கள் மரணத்தை வெல்ல முடியுமா?

Post a Comment

 
Top