ஜாதகம் பார்க்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஜாதகம் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் அதுவே பல கல்யாணங்களுக்குத் தடையாக நிற்கும்போது பார்க்காமல் இருப்பதே சிறந்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

பல பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியப் பெருமை செவ்வாய் தோஷத்திற்கே சேரும். 

செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்கு எவ்வளவு பயப்பட வேண்டும் என்று பார்க்கலாம். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் லக்கினத்திலோ, ('ல' என்று போட்டிருப்பார்களே, அந்த கட்டம் தான் லக்னம்), இரண்டாம் வீட்டிலோ ('ல' போட்ட கட்டம் லக்னம், அதற்கு அடுத்த கட்டம், இரண்டாம் வீடு), நான்காம் வீட்டிலோ, ஏழாம் வீட்டிலோ, எட்டாம்  வீட்டிலோ, பன்னிரெண்டாம்  வீட்டிலோ செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.





இந்த உதாரண ஜாதகத்தில் செவ்வாய் நான்காம் வீட்டில் உள்ளதால், செவ்வாய் தோஷம்  உள்ள ஜாதகம் தான். செவ்வாய் தோஷம் அப்படி என்ன தான் செய்யும்?

செவ்வாய் லக்கினத்தில் இருந்தால் கோபக்காரர்களாக இருப்பர். இரண்டாம் வீட்டிலும், நான்காம் வீட்டிலும் இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது. ஏழாம் வீட்டில் இருந்தால் கணவன் மனைவிக்கிடையே சண்டை. எட்டாம் வீட்டில் இருந்தால் மாங்கல்யத்திற்கு ஆபத்து.  பன்னிரெண்டாம்  வீட்டிலிருந்தால் அதிக செலவு, மற்றும் கட்டில் சுகக்குறைவு.

உண்மையில் இந்த செவ்வாய் தோஷத்திற்கு பல உப விதிகள் உள்ளன. செவ்வாய் சிம்மத்தில் இருந்தாலோ, மகரத்தில் இருந்தாலோ, சூரியனுக்கு மிக  அருகாமையில்  சேர்ந்து இருந்தாலோ தோஷம் கிடையாது. கேதுவுடன் சேர்ந்து இருந்தால் தோஷம் கிடையாது. குரு பார்த்தால் தோஷம் விலகும்.

உண்மையில் செவ்வாய் பெண் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் இருந்தால் மட்டும்  விலக்கலாம்.     மற்றபடி  செவ்வாய் தோஷம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை.

கொடுமை என்னவென்றால், நிறைய பெண்களின் வாழ்க்கை இந்த செவ்வாய் தோஷத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இன்று நாம் பார்க்கும் ஜோதிடர்கள் எல்லாம்  முழுமையான் ஜோதிட அறிவு பெற்றவர்கள் அல்ல. ஆகையால் செவ்வாய் தோஷத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை. மற்ற விஷயங்கள் பொருந்தி வந்தால், செவ்வாய் தோஷத்தைப்  பெரிது பண்ணாமல் தைரியமாக திருமணத்தை நடத்துங்கள்.

வாழ்க வளமுடன் !


             வாஸ்து வேலை செய்யுமா?

                        ஜோதிடம் விஞ்ஞானமா?



Post a Comment

 
Top