இந்த உலகில் இருக்கும் எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனே ஒவ்வொரு நிமிடமும் வாழ்ந்து வருகின்றன. நீங்கள் மகிழ்ச்சியாய் வாழ வேண்டுமென்றால் சில விஷயங்களைப் பண்ண வேண்டும். சில விஷயங்களை தவிர்க்க வேண் டும்.  நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றால் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் எவை? மேலே படியுங்கள்......


1. அதிக ஆசைகள் அதிக எதிர்பார்ப்புகள் தான் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கக் கூடியவை என்பது நிஜம். நியாயமான தேவைகளுக்கு ஆசைப்படலாம் அதில் தவறில்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சி அது வேண்டும் இது வேண்டும் என்று உங்கள் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அதிகப்படுத்தி கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு துன்பங்களும் ஏமாற்றங்களும் தான் மிஞ்சும் என்று உறுதியாக சொல்லலாம். அளவுக்கு மீறிய ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும் தவிருங்கள்.

2. உங்களால் முடியாது என்கின்ற அவ நம்பிக்கையை தவிர்த்து விடுங்கள். நீங்கள் ஒரு விஷயத்தை பண்ண முடியாது என்று நினைத்து விட்டால் அது சிறு  துரும்பை எடுத்து போடுவதாக இருந்தாலும் உங்களால் முடியவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை ஆகும்.

3. இவ்வுலகில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதது. மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்பது எவ்வளவு பெரிய உண்மை? நீங்கள் மாற்றங்களைத் தவிர்க்கும் பழக்கத்தை தவிருங்கள்.

4. எந்த விஷயத்தையும் தள்ளிப் போடும் கெட்ட பழக்கத்தை தவிர்த்து
விடுங்கள்.

5. உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைக் கட்டுப் படுத்த முடிய வில்லை என்று கவலைப் படுவதை  தவிர்த்து விடுங்கள். நீங்கள் கொடிய வெயிலையோ, கடுமையான போக்குவரத்து நெரிசலையோ, அரசாங்கம் அமல் படுத்தும் மின் வெட்டையோ மாற்ற முடியாது. அவை உங்கள் கட்டுப் பாட்டில் இல்லை. அவற்றைக் கட்டுப் படுத்த முயற்சி செய்வதையோ  அல்லது அவற்றிற்காக வருந்துவதைதோ அல்லது கோபப் படுவதையோ தவிர்த்து விடுங்கள். 

6. மற்றவர்களையும்  அவர்கள் செய்யும் செயல்களையும்  குறை சொல்வதை தவிர்த்து விடுங்கள்.

7. மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

8. மற்றவர்கள் செய்த தீமைகளுக்காக அவர்கள் மீது வஞ்சத்தை சுமப்பதை தவிர்த்து விடுங்கள்.

9. பிரச்சினைகளை  சந்திக்காமல் பிரச்சினைகளிலிருந்து ஓடுவதை தவிர்த்து விடுங்கள்.

10. ஒருவர் உங்களுக்கு சரியான நேரத்தில் செய்த உதவியை மறக்கும் தீய குணத்தை தவிர்த்து விடுங்கள்.

11. சோம்பேறித்தனத்தை அறவே தவிர்த்து விடுங்கள்.

அனாவசிய செலவுகளைத் தவிர்ப்பது எப்படி?

உங்கள் இலட்சியங்களை நீங்கள் ஏன் அடைய முடியவில்லை?



Post a Comment

 
Top