நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் தன்னம்பிக்கையும், சுய மரியாதையும் நிச்சயம் வேண்டும். அடிக்கடி உங்களை நீங்களே கொண்டாடிக் கொள்ள வேண்டும். அது உங்களின் தன்னம்பிக்கையையும் சுய மரியாதையையும் வளர்க்க பெரிதும் உதவும். ஆம். வாழ்க்கையில் வெற்றியும், சந்தோஷமும் பெற வேண்டுமென்றால் உங்களை நீங்களே கொண்டாடிக் கொள்ளுங்கள். மேலே படியுங்கள்...........





ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை அல்லது திறமைகள் நிச்சயம் இருக்கும். அவற்றை கண்டறிந்து கொண்டாட கற்றுக் கொள்ளவேண்டும். உதாரணமாக உங்களுக்கு பாடும் திறமை அல்லது நடனம் ஆடும் திறமை இருக்கலாம். அல்லது மற்றவர்களுடன் திறமையாக பேசும் திறன்  இருக்கலாம். நீங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். நிறைய விஷயங்கள் தெரிந்த அறிவுள்ளவராக நீங்கள் இருக்கலாம். 

உங்களின் திறமைகளை  அறிந்துகொண்டு அவைகளைக் கொண்டாடுங்கள். கண்ணாடியின் முன் நின்று கொண்டு உங்களை நீங்களே வியந்து பாராட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் முதலில் உங்களை விரும்ப வேண்டும். உங்கள் திறமைகளைப் போற்றிட வேண்டும். அப்பொழுது தான் உங்களுக்கு தன்னம்பிக்கையும் உற்சாகமும் பிறக்கும். அவை உங்களை வெற்றிப் பாதையில் அழைத்து செல்லும். மேலும் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக்கும் என்பது நிஜம்.

உங்கள் உடலைக்  காதலியுங்கள். உங்கள் மனதையும் திறமைகளையும் காதலியுங்கள். வாழ்க்கை உங்களுக்குக்  கண்டிப்பாய் வசப்படும். வாழ்க வளமுடன்!  

ஒப்பிடுதல் முன்னேற்றத்திற்குத் தேவையா?

விமர்சனங்களை சமாளிப்பது எப்படி?







Post a Comment

 
Top